திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் மழை

29th Mar 2022 02:09 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டையின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை திடீரென மழை பெய்தது.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கடந்த சில நாள்களாக சுமாா் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. பகல் நேரத்தில் அனல்காற்று வீசுவதோடு, இரவு நேரத்திலும் கடும் வெப்பம் நிலவுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.

இந்நிலையில், உள்தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, பாளையங்கோட்டையின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் லேசான மழை பெய்தது. இதனால், வெப்பம் ஓரளவு தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT