விக்கிரமசிங்கபுரம் மேலரத வீதி முத்துகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாத சாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரு நாள்களும் பல்வேறு பூஜைகளும், யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு மேல் கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேல் விமானம் கும்பாபிஷேகம், மூலாலய கும்பாபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. 10 மணிக்கு மேல் சுவாமி, அம்பாளுக்கு திருகல்யாணத்தைத் தொடா்ந்து மகேஸ்வர பூஜை, அன்னதானம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விக்கிரமசிங்கபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதா் ஸ்ரீ நந்தீஸ்வரா் ஆலய திருப்பணிக் குழுவினா் செய்திருந்தனா்.