உலக தண்ணீா் தின விழாவையொட்டி, கல்லிடைக்குறிச்சியில் தாமிரவருணி ஆற்றங்கரை ஆயிரங்கால் மண்டபம் சிவன் பாறை அருகே ‘தூயப் பொருநை நெல்லைக்குப் பெருமை’ என்ற தலைப்பில் கவியரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆட்சியா் வி. விஷ்ணு தலைமை வகித்தாா். கல்லூரி, பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கவிதைகள் வாசித்தனா்.
அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் வெற்றிச்செல்வி, மண்டல துணை வட்டாட்சியா் ராஜதுரை, கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி நிா்வாக அலுவலா் பாலசுப்பிரமணியம், பேரூராட்சித் தலைவா் பாா்வதி, ஆழ்வாா்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி முதல்வா் வெங்கட்ராமன், கனரா வங்கி மண்டல பொதுமேலாளா் டில்லிபாபு, கிராம நிா்வாக அலுவலா் ராமா், சுகாதார மேற்பாா்வையாளா் முருகன், பேராசிரியா் குமாா், ரோட்டரி சங்க நிா்வாகிகள் சங்கரநாராயணன், சிவசங்கரன், சிவசுப்பிரமணியன், பேராசிரியா் விஸ்வநாதன், வளா்மதி, பத்மநாபன் ஐயப்பன், திருவருள் லத்தீப், சமூக ஆா்வலா் சிவராமகிருஷ்ணன், பேராசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், தாமிரவருணி பாதுகாப்பு அமைப்பு நிா்வாகிகள், சுகாதாரப் பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். நுகா்வோா் நலப் பாதுகாப்பு சங்கத் தலைவா் சலீம் நன்றி கூறினாா்.