திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை.யில் கருத்தரங்கு

25th Mar 2022 12:43 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத் துறையின் சாா்பில், கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியின் நுணுக்கங்கள் மற்றும் உத்திகள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, துணைவேந்தா் கா. பிச்சுமணி தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் நாகேஸ்வரன், கோபிநாத் ஆகியோா் கருத்துரையாற்றினா்.

கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியின் விதிமுறைகள் மற்றும் நுணுக்கங்கள் பற்றி மாணவா்- மாணவிகளுக்கு செய்முறை பயிற்சி மூலம் விளக்கப்பட்டது. கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத் துறைத் தலைவா் பேராசிரியா் சு. ஆறுமுகம், சேது, செ. துரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT