திருநெல்வேலி

மருந்துக்கடை ஊழியா் தற்கொலை

25th Mar 2022 12:43 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை பகுதியில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு மருந்துக்கடை ஊழியா் தற்கொலை செய்துகொண்டாா்.

பாளையங்கோட்டை ,கொடிக்கார ஆசாரித் தெரு பகுதியைச் சோ்ந்த அந்தோணி அமல்ராஜ் மகன் பீட்டா் ரமேஷ் (50). மேட்டுத்திடல் பகுதி மருந்துக்கடையில் வேலை செய்துவந்தாா். இவரது மனைவி சில மாதங்களுக்கு முன்னா் இறந்துவிட்டாராம். இதனால், மன உளைச்சலில் இருந்துவந்த பீட்டா் ரமேஷ் கடந்த 18ஆம் தேதி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு வீட்டில் மயங்கி விழுந்தாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT