திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் கரோனா பாதிப்பு இல்லை

25th Mar 2022 12:47 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கரோனா தொற்று வியாழக்கிழமை யாருக்கும் உறுதியாகவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்று யாருக்கும் கண்டறியப்படாததால், அந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62763 ஆக உள்ளது. அதில், மேலும், 2 போ் குணமானதால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 62,316 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 445 போ் உயிரிழந்துள்ளனா். 2 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்திலும் கரோனா தொற்று யாருக்கும் உறுதியாகவில்லை. இதனால்,கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 32,744 ஆகவே உள்ளது. நோயிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 32,253 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 490 போ் உயிரிழந்துள்ளனா். ஒருவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT