திருநெல்வேலி

25இல் டோனாவூரில் இலவச சித்த மருத்துவ முகாம்

22nd Mar 2022 11:57 PM

ADVERTISEMENT

களக்காடு அருகேயுள்ள டோனாவூரில் இலவச சித்த மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 25) நடைபெறுகிறது.

டோனாவூா் பரமசுக சாலை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் 2 மணி வரை நடைபெறவுள்ள இம்முகாமில் பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரி விரிவுரையாளா் ஓய்.ஆா். மானக்சா கலந்து கொண்டு சிகிச்சை அளிக்கிறாா்.

முகாமை டோனாவூா் பரமசுக சாலை செயலா் எசேக்கியேல் தேவஇரக்கம் தொடங்கி வைக்கிறாா். முகாமில் வாதநோய்கள், தோள்பட்டை, கால் மூட்டு, முதுகு தண்டுவட வலிகள், அனைத்து வகை தோல் நோய்கள், குடல்புண், வாய்ப்புண், அஜீரணம், ஆஸ்துமா, தைராய்டு நோய்கள், நீரழிவு போன்ற பொதுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தையின்மைக்கு காரணமான அனைத்து ஆண், பெண் குறைபாடுகளும் நீங்கி தாய்மை பேறடைய இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT