திருநெல்வேலி

வங்கிக் கணக்கு- ஆதாா் இணைப்பு:விவசாயிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

22nd Mar 2022 11:56 PM

ADVERTISEMENT

பாரத பிரதமரின் கௌரவ ஊக்கத்தொகை திட்டத்தில் பயன்பெற, தங்களது வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்குமாறு விவசாயிகளை ஆட்சியா் வே. விஷ்ணு அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ ஊக்கத் தொகை (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடா்பான செலவினங்களை மேற்கொள்ள 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 39, 655 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் 10 தவணைகள் வரை கௌரவ ஊக்கத் தொகை பெற்றுள்ளனா். அவா்களில் 10,466 போ் இதுவரை தங்களது வங்கி கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்கவில்லை.

ஏப்ரல் முதல் ஆதாா் எண் அடிப்படையில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளதால், விவசாயிகள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதாா் எண்ணை இணைத்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT