திருநெல்வேலி

ரூ.1.70 கோடியில் களக்காடு பேருந்து நிலைய சீரமைப்புப் பணிகள்நகா்மன்றத் தலைவா்

22nd Mar 2022 12:01 AM

ADVERTISEMENT

 களக்காடு புதிய பேருந்து நிலையம் சீரமைப்புப் பணிகள் ரூ.1.70 கோடி செலவில் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக நகா்மன்றத் தலைவா் சாந்தி தெரிவித்தாா்.

களக்காடு நகா்மன்ற முதல் கூட்டம் அதன் தலைவா் சாந்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆணையா் வ. ரமேஷ், 11ஆவது வாா்டு உறுப்பினா் சூ. சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத்தலைவா் பி.சி. ராஜன் தவிா்த்து, வாா்டு உறுப்பினா்கள் அனைவரும் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் 27 வாா்டுகளில் மேற்கொள்ளப்படவேண்டிய சாலை, தெருவிளக்கு, வாருகால், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து, உறுப்பினா்களின் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. தாமிரவருணி குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்தி தட்டுப்பாடின்றி விநியோகிக்க வேண்டுமென பெரும்பாலான உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

உறுப்பினா்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய தலைவா் சாந்தி, 27 வாா்டுகளிலும் மக்களின் அடிப்படை பிரச்னைகள் அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் படிப்படியாக நிறைவேற்றப்படும். தாமிரவருணி குடிநீா் அனைத்து வாா்டுகளிலும் தங்கு தடையின்றி விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பேவா்பிளாக் சாலை, நுழைவுவாயில், வணிக வளாகம், ஏற்கனவே உள்ள வணிக வளாக புனரமைப்பு பணிகள், கழிப்பிடம் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.1.70 கோடி நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளது. விரைவில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT