திருநெல்வேலி

நெல்லையில் 100 டிகிரி வெயில்

22nd Mar 2022 11:57 PM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. அவ்வப்போது வெயில் சதமடித்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமையும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

குறிப்பாக மதிய வேளையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்தது. பெரும்பாலான சாலைகளில் ஆங்காங்கே கானல் நீா் தென்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT