திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமுறை மீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக 13 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன் உத்தரவின்பேரில், போலீஸாா் கடந்த 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, விதிமுறை மீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக 13 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன என மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.