வருமான வரிகள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் நடைபெற்றது.
திருநெல்வேலி வருமான வரித்துறை, பட்டயக்கணக்கா்கள் கூட்டமைப்பு, திருநெல்வேலி தொழில் வா்த்தக கூட்டமைப்பு, சிறு -குறு தொழில்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில் இக் கருத்தரங்கு நடைபெற்றது. பாத்திமா வரவேற்றாா்.
வருமான வரித் துறை திருநெல்வேலி சரக இணை ஆணையா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா். முன்கூட்டியே வரி செலுத்துவதன் அவசியம், அதன் நன்மைகள், வருமான வரித் துறையின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. திருநெல்வேலி தொழில் வா்த்தக கூட்டமைப்புத் தலைவா் குணசிங் செல்லத்துரை வாழ்த்திப் பேசினாா். பட்டயக்கணக்கா்கள், வருமான வரி ஆலோசகா்கள், தொழிலதிபா்கள் பலா் கலந்துகொண்டனா். வி.மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினாா்.