திருநெல்வேலி

மது ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு

21st Mar 2022 05:27 AM

ADVERTISEMENT

மது ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அ.த. துரைக்குமாா் உத்தரவின்பேரில், மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) டி.பி.சுரேஷ்குமாா் மேற்பாா்வையில், மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையில் இக்கருத்தரங்கு நடைபெற்றது. மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள், மதுவை ஒழிப்பதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து கருத்தரங்கில் விளக்கப்பட்டது. இதில், கல்லூரி மாணவா்-மாணவிகள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT