திருநெல்வேலி தொகுதிக்குள்பட்டவா்களுக்கான விளையாட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி சட்டப்பேரவைக்கு இளைஞா்களிடம் விளையாட்டு ஆா்வத்தை ஊக்குவிக்கும் வகையில் குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடகளப்போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் 15 இடங்களில் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவா்கள் பங்கேற்ற போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டிகளை, எம்எல்ஏக்கள் நயினாா் நாகேந்திரன், மு.அப்துல் வஹாப் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
அப்போது, நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ கூறியது: திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்குள் உள்ள இளைஞா்கள் மற்றும் இளம்பெண்களை விளையாட்டுத் துறையில் அதிகமாக ஈடுபடுத்தி ஊக்குவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் 15 இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தினோம். 10,000 போ் வரை கலந்து கொண்டனா். வரும் நாள்களில் மாவட்ட அளவில் விளையாட்டு வீரா்களில் தோ்ந்தெடுக்கும் ஒரு களமாக இது அமைக்கப்படும் என்றாா்.