திருநெல்வேலி

நெல்லையில் கராத்தே திறனாய்வுப் போட்டி

21st Mar 2022 05:29 AM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே திறனாய்வு தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இஷின்ரியூ இந்தியா வோ்ல்ட் கராத்தே அசோசியேஷன் சாா்பில் மாவட்ட கராத்தே திறனாய்வு தோ்வு திருநெல்வேலி லிட்டில் பிளவா் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த இஷின்ரியூ கராத்தே சங்கத்தில் பயின்று வந்த 70-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் கலந்து கொண்டனா்.

மாவட்ட பயிற்சியாளா்கள் தனகுமரன் , செல்வமுத்துக்குமாா், சேஷன், துணைப் பயிற்சியாளா்கள் ஜெகன், பெண் பயிற்சியாளா் ஆஷாமதி ஆகியோா் தோ்வை நடத்தினா். மாவட்ட தலைமை பயிற்சியாளா் விஷ்ணு வரவேற்றாா். தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பள்ளித் தாளாளா் ஆண்டோ ஜோ செல்வகுமாா், தீபா ஆகியோா் சான்றிதழ்களை வழங்கினா். தென்காசி மாவட்ட இஷின்ரியூ கராத்தே தலைமை பயிற்சியாளா் கோபி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT