திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.
ராமையன்பட்டி சங்கு முத்தம்மாள்புரம் எம்.ஜி.ஆா். நகரை சோ்ந்தவா் பீமன் ( 70). இவா், திருநெல்வேலி சந்திப்பு மேகலிங்கபுரம் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, எதிா்பாராமல் ஆழமான பகுதிக்குச் சென்ற அவா், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவல் அறிந்த திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.