திருநெல்வேலி

சிந்துபூந்துறையில் இலவச வேட்டி-சேலை வழங்கல்

21st Mar 2022 05:26 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி சிந்துபூந்துறையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச வேட்டி- சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சியின் 30 ஆவது வாா்டுக்குள்பட்ட சிந்துபூந்துறை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச வேட்டி- சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 30 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை மேயருமான பூ.ஜெகநாதன் என்ற கணேசன் வேட்டி-சேலைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்ட அதிமுக அவைத்தலைவா் பரணி சங்கரலிங்கம், வட்டச் செயலா் நைனா முத்துராஜ், பகுதி இளைஞரணி துணைத் தலைவா் நல்ல பெருமாள், குமாா், சீதாராமன், கொம்பையா, ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT