திருநெல்வேலி

ரயில்வே ஊழியா்கள் போராட்டம்

14th Mar 2022 11:47 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி சந்திப்பில் ரயில்வே ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாடு முழுவதும் ரயில்வே ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

எஸ்.ஆா்.எம்.யூ., ஏ.ஐ.ஆா்.எப். தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு எஸ்.ஆா்.எம்.யூ. வெளிகிளைச் செயலா் என்.சுப்பையா தலைமை வகித்தாா். திருநெல்வேலி வெளி கிளை செயலா்ஐயப்பன் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் எம்.கணேசன், எஸ்.தமிழரசன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். லட்சுமணபெருமாள், அந்தோணி, பிரேம்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT