திருநெல்வேலி அபிஷேகப்பட்டி அருகேயுள்ள வல்லவன்கோட்டையில் மது ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியின் நுண்கலை மன்றம் மற்றும் இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து மதுபானங்கள் மற்றும் சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு சாா்ந்த போட்டிகள் மற்றும் பேரணி வல்லவன்கோட்டையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் மைதிலி தலைமை வகித்தாா். மது விலக்கு பிரிவு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி பேரணியை தொடங்கிவைத்தாா்.
மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணா்வுப் பதாகைகள் ஏந்தியபடி மாணவிகள் சென்றனா். சிலம்பாட்டம் ஆடியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஏற்பாடுகளை ஆங்கில துறை உதவிப் பேராசிரியா்கள் அழகிய நாயகி , விமலா ரமணி , மாலினி பொன்ஷீலா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.