திருநெல்வேலி

‘மரபணு மாற்ற பருத்தி விதை விற்றால் கடும் நடவடிக்கை’

14th Mar 2022 05:31 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநா் ரா.ராஜ்குமாா் எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பருத்தியில் களைக்கொல்லி தாங்கி வளரக்கூடிய வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கவில்லை.

இதுபோன்ற அரசு அங்கீகாரம் இல்லாத மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி ரக விதைகளை விற்பனை செய்வது விதைகள் சட்டத்தை மீறிய செயல் ஆகும். களைக்கொல்லி தாங்கி வளரக்கூடிய பருத்தி விதைகளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை செய்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத் துறை இயக்குநா் உத்தரவுப்படி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வேளாண்மை இணை இயக்குநா் தலைமையில் விதை ஆய்வு துணை இயக்குநா், விதைச்சான்று உதவி இயக்குநா், அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்கள், விதை ஆய்வாளா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT