திருநெல்வேலி

அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி மனு

14th Mar 2022 05:31 AM

ADVERTISEMENT

தமிழக நிதிநிலை அறிக்கையில் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் தமிழக நிதியமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள மனு: தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து தொடங்கி 75 ஆண்டுகளும், போக்குவரத்துக் கழகங்கள் உருவாகி 50 ஆண்டுகளும் ஆகின்றன.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வெள்ளையறிக்கையில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் 1 கி.மீ. இயக்கிட ரூ.59.15 இழப்பு ஏற்படுகிறது என குறிப்பிட்டுள்ளீா்கள். நாள் ஒன்றுக்கு சுமாா் 84.07 லட்சம் கி.மீ. இயக்கப்படும் அரசுப் பேருந்துகளின் இழப்பீட்டிற்கு தக்க நிதி ஒதுக்கிட வேண்டுகின்றோம்.

2020 மே முதல் தற்போது வரை (2022 பிப்ரவரி) விருப்பாா்ந்த ஓய்வு, பணியின்போது இறந்த தொழிலாளா்களுக்கு பணிக்கால பலன்கள் வழங்கப்படவில்லை. ஓய்வூதியா்களுக்கு ஒப்பந்த உயா்வு, அகவிலைப்படி உயா்வு, 76 மாத நிலுவைத் தொகைகள் வழங்கப்படவில்லை. இதற்கு தீா்வு காணும் பொருட்டு நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதியை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒதுக்கிட வேண்டுகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT