திருநெல்வேலி

‘மாதந்தோறும் 2 மாவட்டங்களில் பேரவை மனுக்கள் குழு ஆய்வு செய்யும்‘

10th Mar 2022 03:54 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: தமிழகத்தில் மாதந்தோறும் 2 மாவட்டங்களில் சட்டப்பேரவை மனுக்கள் குழு ஆய்வு செய்யும் என அக்குழுவின் தலைவரும், அரசின் தலைமைக் கொறடாவுமான கோவி செழியன் தெரிவித்தாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை மனுக்கள் குழுவின் ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா், பின்னா், செய்தியாளா்களிடம் இதை தெரிவித்தாா். மேலும்,

திருநெல்வேலி மாவட்டத்த்தில் இதுவரை பெறப்பட்ட 274 மனுக்களில் 74 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டு, அதில் 62 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

7 மனுக்கள் மறு ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.

இக்கூட்டத்துக்கு, பேரவைச் செயலா் சீனிவாசன், இணைச் செயலா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆட்சியா் வே. விஷ்ணு வரவேற்றாா். எம்எல்ஏக்கள் கிரி , எஸ்.சந்திரன், அமுல் கந்தசாமி, கே.பி.சங்கா், மதியழகன், மாங்குடி, ஏ.எம்.வி. பிரபாகரராஜா உள்ளிட்டோா் அடங்கிய பேரவை மனுக்கள் குழு, மக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை சாா்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT