திருநெல்வேலி

காவல்கிணறு அருகேசாலையைச் சீரமைக்க வலியுறுத்தி போராட்டம்

10th Mar 2022 03:52 AM

ADVERTISEMENT

 

வள்ளியூா்: காவல்கிணறு அருகேயுள்ள வெள்ளக்கோவிலிலிருந்து பெருங்காளியாபுரம் வழியாக வடக்கு பெருங்குடி செல்லும் சாலையை சீரமைக்கக் கோரி, முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் , நாம் தமிழா் கட்சியினா் புதன்கிழமை ஈடுபட்டனா்.

இப்போராட்டத்துக்கு, நாம் தமிழா் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாவட்டச் செயலா் கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். தொகுதி துணைச் செயலா் ஜெயசீலன், வடக்கன்குளம் கிளைத் தலைவா் லாா்சன், அம்பேத்கா் மக்கள் இயக்க மாவட்டச் செயலா் மகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்று அஞ்சல் அட்டை அனுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT