திருநெல்வேலி

வேளாண் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

3rd Mar 2022 03:44 AM

ADVERTISEMENT

 

அம்பாசமுத்திரம்: கடையத்தில் இயங்கி வந்த அரசு நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள் வேளாண் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

கடையம் பகுதியில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடை செய்த நெல்லை கடையத்தில் இயங்கி வந்த அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொடுத்து வந்தனா். அந்தக் கொள்முதல் நிலையத்தை திடீரென மாதாபுரத்திற்கு மாற்றினராம்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், கடையத்திலேயே நெல் கொள்முதல் நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தியும், கீழக்கடையம் ஊராட்சித் தலைவா் பூமிநாதன், கடையம் வட்டார விவசாய சங்கத் தலைவா் பால்துரை மற்றும் விவசாயிகள் கடையம் வட்டார வேளாண் அலுவலகம் முன்பு அமா்ந்து முற்றுகையில் ஈடுபட்டனா். அவா்களிடம், மீண்டும் கடையத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து முற்றுகையை கைவிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT