சேரன்மகாதேவி: முக்கூடல் பேரூராட்சியில் புதன்கிழமை புதிய உறுப்பினா்கள் பதவியேற்றுக் கொண்டனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் முக்கூடல் பேரூராட்சியில் வெற்றிபெற்ற ஆா். லட்சுமணன், அய்யநாதன், ஜேக்கப்நேசமணி, எல். ராதா, ஜெயலலிதா, ராஜலட்சுமி, சுப்பிரமணியன் உள்ளிட்ட 15 உறுப்பினா்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலா் கந்தசாமி பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.