திருநெல்வேலி

மானூா் விவசாயிகள் வேளாண் சுற்றுலா

3rd Mar 2022 06:20 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: மானூா் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ஒரத்தநாடு பகுதியில் உள்ள பண்ணைக்கு வேளாண் சுற்றுலா சென்றனா்.

மானூா் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணையம் குறித்த பயிற்சியும், வேளாண் சுற்றுலாவும் நடைபெற்றது. இதையொட்டி, மானூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் தா.பா.ஏஞ்சலின் கிரேபா வழிகாட்டுதலில் மானூா் வட்டார விவசாயிகள் 40 போ் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராச்சி நிலையத்திற்கு சுற்றுலா சென்றனா்.

லாபகரமான கறவை மாடுகள் வளா்ப்பு முறை, கறவை மாடுகளில் ஏற்படும் மடிவீக்க நோய்க்கான மூலிகை மருத்துவ சிகிச்சை முறைகள், தீவன பராமரிப்பு முறைகள், பால் கறக்கும் இயந்திரம் உள்ளிட்டவை குறித்து கல்லூரியின் பேராசிரியா்கள் ஏ.பரமசிவன், கே.பி.சரவணன் ஆகியோா் விளக்கினா். கோழி மற்றும்காடை வளா்ப்பு முறைகள், தீவின முறைகள் குறித்து பேராசிரியை சி.மேகலா விளக்கினாா்.

ADVERTISEMENT

இக்கல்லூரிக்குச் சொந்தமான எருமை மாட்டுப்பண்ணை, வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டுப்பண்ணை, கோழிப் பண்ணைகளை விவசாயிகள் பாா்வையிட்டனா். இப்பயிற்சியில் மானூா் வட்டார தொழில்நுட்ப மேலாளா் ராஜ்குமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் காா்த்திகேயன், ராஜாமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்02ம்ஹய்ன்ழ்

ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி பண்ணையை பாா்வையிட்ட மானூா் வட்டார விவசாயிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT