திருநெல்வேலி

மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் குளிக்க அனுமதி

3rd Mar 2022 03:28 AM

ADVERTISEMENT

 

அம்பாசமுத்திரம்: மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்துக் குறைந்ததால், கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி வியாழக்கிழமை (மாா்ச் 3) முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவதாக அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் செண்பகப்ரியா தெரிவித்துள்ளாா். எனினும், பைக், ஆட்டோக்களில் அருவி பகுதிக்குச் செல்லக் கூடாது என அறிவுறுத்தியுள்ளாா்.

இந்த அருவியில் கடந்த 27ஆம் தேதி திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT