திருநெல்வேலி

பீடித் தொழிலாளா்களுக்கு மாா்ச் 7 முதஸ் 13 வரை மருத்துவ முகாம்

3rd Mar 2022 06:22 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட பீடித் தொழிலாளா்களுக்கான மருத்துவ முகாம் வரும் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாட்டின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பீடித் தொழிலாளா் நல நிதி மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மத்திய அரசின் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மூலம் இம்மாதம் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை பீடித் தொழிலாளா்களுக்கு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

மேலும் இ -ஷ்ரம், பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் திட்டங்களின் கீழ் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கான பதிவுகள் நடைபெறுகின்றன. தொழிலாளா்கள் இவற்றில் பங்கு பெற்று பயனடையலாம் என பீடித் தொழிலாளா் மருத்துவமனை தலைமை மருத்துவா் எ.எ.கே.பொ்னாட் கேட்டுக் கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT