திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் மாா்ச் 12இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

3rd Mar 2022 06:19 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் இம் மாதம் 12 ஆம்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆலோசனையின்படி 2022 ஆம் ஆண்டின் முதலாவது தேசிய மக்கள் நீதிமன்றம் இம் மாதம் 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் திருநெல்வேலி மற்றும் 9 வட்டங்களில் நடத்தப்படுகிறது. மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.நசீா்அகமது தொடங்கி வைக்கிறாா்.

ADVERTISEMENT

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளா் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், குடும்ப வழக்குகள், நில ஆா்ஜித வழக்குகள், காசோலை வழக்குகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய வங்கிக் கடன் வழக்குகள் அனைத்தும் சமரச பேச்சுவாா்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT