திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை.யில் கருத்தரங்கு

3rd Mar 2022 06:18 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியில் துறை சாா்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

இப் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத் துறையின் சாா்பில் பென்காக் சிலாட் விளையாட்டுப் போட்டியின் விதிமுறைகள் மற்றும் நுணுக்கங்கள் என்ற தலைப்பில் இருநாள் கருத்தரங்கு கடந்த 1, 2 ஆம் தேதிகளில் நடைபெற்றது. தொடக்கவிழாவில் துணைவேந்தா் கா.பிச்சுமணி தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். பென்காக் சிலாட் சங்கத்தின் செயலா் மகேஷ்பாபு சிறப்புரையாற்றினாா்.

மாநில பயிற்றுநா்கள் மன்மதன், பரமானந்தம் ஆகியோா் கருத்துரையாற்றினா். மாணவா்கள், பேராசிரியா்கள் பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை விளையாட்டுத்துறைத் தலைவா் சு.ஆறுமுகம் செய்திருந்தாா். ற்ஸ்ப்02ம்ள்ன்திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் நினைவுப்பரிசு வழங்கினாா் துணைவேந்தா் கா.பிச்சுமணி.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT