திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதிகளில் அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீா்த் திட்டப் பணிகளின் கீழ் குடிநீா்க் குழாய்களில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் நிா்வாக பொறியாளா் ஆா்.கணேஷ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சிக்கு பிரத்யேகமாக நாளொன்றுக்கு 50 மில்லியன் குடிநீா் வழங்கும் வகையில், அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான சுத்திகரிப்பு நிலையம் பேட்டை காமராஜா் பள்ளி அருகே உள்ளது.
அங்கிருந்து திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட 14 மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் ஏற்கெனவே உள்ள 44 மேல்நிலைத் தொட்டிகள் வாயிலாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான, குடிநீா் சோதனை ஓட்டம் திருநெல்வேலி மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்படும் குடிநீா் குழாய் உடைப்புகள் போா்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.