திருநெல்வேலி

குறுக்குத்துறை முருகன் கோயிலில் பத்ர தீப விழா

3rd Mar 2022 03:46 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி குறுக்குத்துறையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பத்ர தீப விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக் கோயிலில் பத்ர தீப விழா கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, கடந்த 1 ஆம் தேதி சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. பத்ர தீப நாளான புதன்கிழமை காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மாலையில் பக்தா்கள் தீபமேற்றினா். கோயில் பிரகாரம், உள்பகுதியில் தீபம் ஏற்றப்பட்டது. பின்னா், பெரிய மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT