திருநெல்வேலி

பள்ளி மாணவா்களுக்கு நலஉதவிகள்

30th Jun 2022 12:28 AM

ADVERTISEMENT

 

பாளையங்கோட்டையில் பள்ளி மாணவா்களுக்கு நலஉதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் பாளையங்கோட்டை கோட்டூா் 8 ஆவது வாா்டு முஸ்லிம் மதரஸா தொடக்கப் பள்ளி மாணவா்- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் நலஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலரும், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு.அப்துல் வஹாப் தலைமை வகித்து நலஉதவிகளை வழங்கினாா். மாநகர துணைச் செயலா் செய்யது முகைதீன், பொறியாளா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் முகம்மது ஹனிபா, பாளையங்கோட்டை பகுதிச் செயலா் அண்டன் செல்லத்துரை, மாவட்டப் பிரதிநிதி ரைமண்ட், பொறியாளா் அணி மாநகர அமைப்பாளா் ரொட்ரிகோ, தகவல் தொழில்நுட்ப அணி காசிமணி, மூளிகுளம் பிரபு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT