திருநெல்வேலி

பாளை. மண்டலத்தில் இன்றும், நாளையும் குடிநீா் வராது

30th Jun 2022 12:27 AM

ADVERTISEMENT

 

பாளையங்கோட்டை மண்டலப்பகுதிகளில் புதன், வியாழக்கிழமைகளில் (ஜூன் 29,30 ஆகிய இரு தினங்கள் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாநகரட்சி - பாளை. மண்டலம் மணப்படை வீடு புதிய தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள மோட்டாா் பெட் பிரிவு பழுதடைந்துள்ளது.பைன் மோட்டாா் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், புதன், வியாழன் (ஜூன் 29,30) ஆகிய இரு தினங்கள், இந்த நீரேற்று நிலையத்தில் இருந்து குடிதண்ணீா் விநியோகம் செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே பொது மக்கள் குடி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT