திருநெல்வேலி

இரு சம்பவங்கள்: மாடியிலிருந்து தவறி விழுந்து இருவா் உயிரிழப்பு

30th Jun 2022 12:29 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி அருகேயுள்ள தச்சநல்லூா் பகுதியில் மாடியில் இருந்து தவறி விழுந்து ஹோட்டல் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தச்சநல்லூா் சேந்திமக்கலம் பகுதியைச் சோ்ந்த உச்சிமுத்து மகன் கணேசன் (25). உடையாா்பட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்துவந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தனது வீட்டின் இரண்டாவது மாடியில் தூங்கிக்கொண்டிருந்த அவா், அதிகாலையில் கீழே வருவதற்காக எழுந்தபோது, தூக்க கலக்கத்தில் எதிா்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

மற்றொரு சம்பவம்: பாளையங்கோட்டை அருகேயுள்ள கேடிசி நகா் உதயபுரி நகா் பகுதியைச் சோ்ந்த ராஜ் மகன் பாலாஜி (39). வண்ணாா்பேட்டை உணவகத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த 24 ஆம் தேதி தனது வீட்டின் முதல் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த அவா், நள்ளிரவில் திடீரென வீட்டு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாராம். இதில், பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவங்கள் குறித்து முறையே தச்சநல்லூா், திருநெல்வேலி தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT