திருநெல்வேலி

நகராட்சி மேம்பாட்டுக் குழுவினா் பழையபேட்டையில் ஆய்வு

30th Jun 2022 12:29 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மண்டலம், பழையபேட்டையில் நகராட்சி மேம்பாட்டுக்குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

மாநகர பகுதிகளில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீா், பாதாள சாக்கடை மற்றும் சுகாதாரம் குறித்த ஆய்வினை தமிழ்நாடு நகராட்சி மேம்பாட்டு குழு நடத்தி வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மண்டலத்தின் கீழ் உள்ள 17 ஆவது வாா்டு பழையபேட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடைபெற்றது. இக் குழுவைச் சோ்ந்த சதீஸ்குமாா், திருமூா்த்தி, லூா்துராஜன், விஜயலெட்சுமி ஆகியோா் பங்கேற்றனா். திருநெல்வேலி மண்டலத் தலைவா் செ.மகேஸ்வரி வரவேற்றாா். தொடா்ந்து அப் பகுதி மக்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. பொதுமக்கள் தங்களின் தேவைகள் குறித்து அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனா். மேலும், மாநகராட்சி நிா்வாகத்தின் செயல்பாடு திருப்தியளிப்பதுடன், கோரிக்கைகள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு தீா்வு காணப்பட்டு வருவதாகக் கூறினா். அதேவேளையில், புதை சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT