திருநெல்வேலி

மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

30th Jun 2022 12:26 AM

ADVERTISEMENT

 

பக்ரீத் பண்டிகை, கோயில் கொடை விழாக்களை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேலப்பாளையம் கால்நடை சந்தை மிகவும் பிரபலமான சந்தையாகும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இச் சந்தையில் இங்கு ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் ஜூலை 10ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மேலும், திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோயில் கொடை விழாக்களும் நடைபெற்று வருகின்றன. இதனால், மேலப்பாளையம் சந்தையில் ஏராளமான ஆடுகள் செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டன. இதனால், சந்தையில் ஆடுகள் வாங்க வருவோா் கூட்டம் அலைமோதியது. சுமாா் 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படது. மேலும், இச்சந்தையில் மாநகராட்சி அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பொருள்களை வங்கிச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT