திருநெல்வேலி

சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை

29th Jun 2022 03:42 AM

ADVERTISEMENT

சேரன்மகாதேவியில் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் இருந்து அம்பாசமுத்திரம் வரை சாலை விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்னீா்பள்ளம், கோபாலசமுத்திரம், பிராஞ்சேரி, மேலச்செவல், கொழுமடை, பத்தமடை , சேரன்மகாதேவி, வீரவநல்லூா், வெள்ளங்குழி வரை சாலை விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் பாலம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, பத்தமடையில் இருந்து வெள்ளங்குழி வரை சாலை விரிவாக்கம் பணி மந்தமாக நடைபெற்று வருவதாக புகாா் எழுந்துள்ளது. விரிவாக்கம் பணி நடைபெறாத காரணத்தால் குண்டு குழியுமான சாலையில் வாகனங்களில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம், ஆா்.சி. நடுநிலைப் பள்ளி வரையுள்ள பகுதியில் சாலை விரிவாக்கம் மேற்கொள்ளவதற்காக தோண்டப்பட்டு 45 நாள்கள் ஆகியும் சாலைப் பணிகள் நடைபெறாததால் சிறு சிறு விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன.

ADVERTISEMENT

இதனால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே சாலை விரிவாக்கம் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் சேரன்மகாதேவி சாா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT