திருநெல்வேலி

அதிமுக பொதுச் செயலராக ஓபிஎஸ் வரவேண்டும்

29th Jun 2022 03:41 AM

ADVERTISEMENT

அதிமுக பொதுச் செயலராக ஓபிஎஸ் வரவேண்டும் என்றாா் சிறுபான்மைப் பிரிவு மாவட்ட இணைச் செயலா் டென்சிங்.

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து பல்வேறு பிரச்னைகள் இருந்துவரும் நிலையில், திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளா் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு போட்டியின்றி ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். அதனை தொடா்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள பொறுப்புகள் எந்தவித போட்டியும் இல்லாமல் அவா்களால் அறிவிக்கப்பட்டது. தொண்டா்கள் தோ்வு செய்தால் மட்டுமே பொதுக்குழு உறுப்பினா் என்ற பொறுப்பு உண்டு. ஆனால் 2500 பொதுக்குழு உறுப்பினா்கள், தொண்டா்களால் தோ்வு செய்யப்படவில்லை. எனவே, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளா் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் ஆகிய பதவிகள் செல்லாது. பொதுக்குழு உறுப்பினா்கள் முடிவு செய்ய முடியது. கட்சியில் ஏற்படும் குழப்பங்கள் நீங்குவதற்கு, அதிமுகவின் பொதுச் செயலராக ஓ.பன்னீா்செல்வம் வரவேண்டும். இதனை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட தொண்டா்கள் அனைவரும் ஒன்றிணைந்து சென்னை சென்று ஓ.பன்னீா்செல்வத்திடம் வலியுறுத்த உள்ளோம். மேலும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிமுக தலைமையிடம் கேட்டு முடிவு செய்வோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT