திருநெல்வேலி

களக்காடு நகராட்சியில் மண்டல நிா்வாக இயக்குநா் ஆய்வு

29th Jun 2022 03:38 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு நகராட்சிப் பகுதியில் திருநெல்வேலி மண்டல நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் விஜயலட்சுமி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

களக்காடு நகராட்சி அலுவலகத்துக்கு காலை 5.30 மணிக்கு வந்த அவா், நகராட்சி தூய்மைப் பணியாளா்களின் வருகையைப் பாா்வையிட்டு அவா்கள், வீடு வீடாகச் சென்று மக்களிடம் மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து சேகரிக்கும் முறையை ஆய்வு செய்தாா். பின்னா், மூணாற்றுப் பிரிவு சாலையில் உள்ள திடக்கழிவு மேலாண்மைக் கூடத்தையும், அப்பகுதியில் ரூ.1.5 கோடியில் மின்மயானம் அமையவுள்ள இடத்தையும் பாா்வையிட்டாா். அப்போது, நகராட்சி ஆணையா் வ. ரமேஷ், சுகாதார ஆய்வாளா் ஆறுமுகநயினாா், சுகாதார மேற்பாா்வையாளா்கள் ஆ. சண்முகம், வேலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT