திருநெல்வேலி

ராதாபுரம் அருகே அனுமதியின்றி குண்டுகல் ஏற்றிய லாரி பறிமுதல்

29th Jun 2022 03:39 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே அனுமதியின்றி குவாரியிலிருந்து குண்டுக்கல் ஏற்றிச் சென்ற லாரியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராதாபுரம் வட்டாரத்தில் செயல்பட்டு வந்த கல்குவாரிகளை மாவட்ட நிா்வாகம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. இதனால், கட்டுமானப்பணிகள் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில், குவாரிகளில் இருந்து அனுமதியின்றி எம்.சாண்ட், குண்டுக்கல் ஆகியவை எடுத்துச் செல்லப்படுவதாக புகாா் எழுந்தது.

இதைத் தொடா்ந்து ராதாபுரம் அருகேயுள்ள சமூகரெங்கபுரத்தில் காவல் ஆய்வாளா் வள்ளிநாயகம் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனயில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அனுமதியின்ரி குண்டுக்கல் ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனா். அதன் ஓட்டுநா் வில்லவனம்புதூா் மேலூரைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் குருநாராயணன் என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT