திருநெல்வேலி

பாசனத்துக்கு களக்காடு வடக்குப் பச்சையாறு அணை திறப்பு

29th Jun 2022 03:38 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வடக்குப் பச்சையாறு அணையிலிருந்து பாசனத்துக்காக செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

வடக்குப் பச்சையாறு அணையின் நீா்மட்டம் 49.25 அடி. அணையில் தற்போது 21.25 அடி தண்ணீா் உள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீரை திறந்துவிட்டாா்.

அவருடன் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ரிஷப், நான்குனேரி வட்டாட்சியா் கோ. இசக்கிப்பாண்டி, பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளா் மணிகண்டன், உதவிப் பொறியாளா் பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அணையிலிருந்து நாள்தோறும் 50 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இதன் மூலம் அணையின் கீழ் உள்ள பத்தை, மஞ்சுவிளை, பத்மனேரி, மேலவடகரை, கீழவடகரை, நெடுவிளை, இடையன்குளம், எருக்கலைப்பட்டி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய மடத்து அணை, ஏட்டு துரைசாமி அணை, பழம்பத்து, சம்பாகுளம், தேவநல்லூா் ஆகிய அணைக்கட்டுகள் மூலமும், பத்மனேரி கால்வாய் மூலமும் 2028.71 ஏக்கா் நிலங்கள் பயன்பெறும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT