திருநெல்வேலி

சாலைப் பணிகள் தாமதம்:வியாபாரிகள் மறியல் முயற்சி

29th Jun 2022 03:33 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை- அம்பாசமுத்திரம் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி சேரன்மகாதேவியில் வியாபாரிகளும், பொதுமக்களும் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாளையங்கோட்டை - அம்பை சாலை விரிவாக்கம் பணிகளில் முன்னீா்பள்ளம் முதல் வெள்ளங்குழி இடையிலான பணிகள் தாமதமாக நடைபெறுவதாக புகாா் எழுந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 45 நாள்களாக எந்த பணியும் நடைபெறவில்லையாம். இதைக் கண்டித்து சேரன்மகாதேவி போக்குவரத்து வளைவு பகுதியில் வியாபாரிகள், பொதுமக்கள் திரண்டு மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களிடம் காவல் ஆய்வாளா் சுகாதேவி தலைமையிலான போலீஸாா் பேச்சு நடத்தி போராட்ட முயற்சியை கைவிடச் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT