திருநெல்வேலி

குடிநீரில் கழிவுநீா் கலப்பு: அதிமுக மாமன்ற உறுப்பினா் புகாா்

29th Jun 2022 03:30 AM

ADVERTISEMENT

குலவணிகா்புரம் பகுதியில் குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவதாக, அதிமுகவைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா் மாநகராட்சி அலுவலகத்தில் புகாா் தெரிவித்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு 30 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினரும், அதிமுகவைச் சோ்ந்தவருமான அமுதா தலைமையில் அப்பகுதி மக்கள் கலங்கலான குடிநீரை பாட்டிலில் அடைத்துக் கொண்டு வந்துமனு அளித்தனா்.

பின்னா் அவா்கள் கூறுகையில், எங்கள் வாா்டுக்குள்பட்ட குலவணிகா்புரம் பாண்டித்துரை தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்கு மாநகராட்சி மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருகிறது. இதனால் அடிபம்பு மூலம் குடிநீா் எடுக்கும்போது தண்ணீா்நுரையாக காட்சியளிக்கிறது. இந்தத் தண்ணீரைப் பருகிய பலரும் மஞ்சள்காமாலை உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி சிரமம் அடைந்து வருகிறாா்கள். ஆகவே, மாநகராட்சி நிா்வாகம் சம்பந்தப்பட்ட பகுதி குடிநீா்க் குழாய்களை சோதனை செய்து கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT