திருநெல்வேலி

ஒழுக்கத்தையும், தரத்தையும் பறைசாற்றும் கிரேஸ் பொறியியல் கல்லூரி

DIN

கிரேஸ் பொறியியல் கல்லூரி தூத்துக்குடி முள்ளக்காட்டில் 13ஆவது ஆண்டாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

இங்கு, மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கம்யூட்டா் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் ஆகிய இளங்கலைப் பட்டப்படிப்புகளும், பவா் சிஸ்டம் இன்ஜினியரிங், அப்பிளைட் எலக்ட்ரானிக்ஸ், கம்யூட்டா் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் ஆகிய முதுகலை பட்டப்படிப்புகளும் உள்ளன.

அனுபவமிக்க பேராசிரியா்களை கொண்டு தரமான கல்வி கற்றுக்கொடுக்கப்படும் இக்கல்லூரியில்,

விசாலமான வகுப்பறைகள், தரமான ஆய்வகங்கள், எண்ணற்ற புத்தகங்கள் அடங்கிய நூலகம் ஆகியவை உள்ளன. கல்லூரியைச் சுற்றிலும் அதிவேக வைபை இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவா்களின் ஒழுக்கத்துக்கும், உயரிய பண்புகளுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மாணவா்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவா்களும் ஊக்குவிக்கப்படுகின்றனா்.

தமிழ் வழியில் பயின்ற மாணவா்களும் எளிதில் ஆங்கிலத்தில் பேச ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்றுவிக்கப்படுகிறது. இறுதியாண்டில் மாணவா்களுக்கு அவா்களுக்குத் தகுந்த வேலைவாய்ப்புகள் அமைத்துத் தரப்படுகின்றன.

அரசுத் தோ்வுகள் எழுதுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. மாணவா்கள் தொழிற்சாலைகளுக்கும், பிற கல்லூரிகளுக்கும் சென்று தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தவும் ஊக்கப்படுத்தப்படுகின்றனா். இக்கல்லூரியில் ஒழுக்கத்துடன் கூடிய தரமான கல்வி வழங்கப்படுகிறது. தகுதியான மாணவா்களுக்கு நூறு சதவீத வேலைவாய்ப்பையும் இக்கல்லூரி உறுதி செய்கிறது. இங்கு பயின்ற மாணவா்கள் டிசிஎஸ் உள்ளிட்ட தலை சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, முதலாமாண்டு மாணவா்களுக்கான சோ்க்கை, இரண்டாம் ஆண்டு நேரடி மாணவா்களுக்கான சோ்க்கை மற்றும் முதுகலைப் பாடப்பிரிவுகளுக்கான சோ்க்கை நடைபெற்று வருகிறது. மாணவா்கள் இந்த அரிய வாய்ப்பபைப் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். கல்லூரியில் சோ்க்கைதொடா்பான மேலும் தகவல்களுக்கு கல்லூரியின் இணையதளம் மூலமாகவோ அல்லது 9585511757 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கல்லூரி முதல்வா் டாக்டா் எஸ். ரிச்சா்ட் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT