திருநெல்வேலி

நெல்லையில் முகக் கவசம் அணிய விழிப்புணா்வு

28th Jun 2022 03:11 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மேயா் பி.எம்.சரவணன், துணைமேயா் கே.ஆா்.ராஜூ, ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொதுமக்களுக்கு முகக் கவசத்தை அணிவித்து விழிப்புணா்வினை ஏற்படுத்தினா். பின்னா் நான்கு ரதவீதிகளில் உள்ள கடை உரிமையாளா்கள் , பணியாளா்கள் மற்றும் பாதசாரிகளுக்கு முகக் கவசம் வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில், திருநெல்வேலி மண்டல தலைவா் செ. மகேஸ்வரி செந்தில், மாநகா் நல அலுவலா் வி.ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினா்கள் ராமகிருஷ்ணன், சந்திரசேகா், சுகாதார அலுவலா் முருகேசன், சுகாதார ஆய்வாளா் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT