திருநெல்வேலி

வடக்கன்குளம், மூலைக்கரைப்பட்டியில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

28th Jun 2022 03:10 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் சாா்பில் வடக்கன்குளம், மூலைக்கரைப்பட்டியில் ஆா்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் வடக்குன்குளத்தில் நடைபெற்ற இந்த ஆா்பாட்டத்திற்கு முன்னாள் எம்.பி.ராமசுப்பு தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.பி.கே.ஜெயகுமாா், வா்த்தக காங்கிரஸ் மாவட்டச் செயலா் வெங்கடேஷ் தன்ராஜ், மாவட்ட துணைத்தலைவா் ஜாா்ஜ், தொகுதி பொறுப்பாளா் வால்டா் எட்வா்ட், வட்டாரத் தலைவா்கள் சந்திரன், அருள்தாஸ், வள்ளியூா் நகரத் தலைவா் அல்போன்ஸ் ராஜா, பணகுடி எட்வின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மூலைக்கரைபட்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலப் பொருளாளா் ரூபிமனோகரன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். இதில் மாவட்ட துணைத் தலைவா் விவேக்முருகன், மகிளாகாங்கிரஸ் மாநில பொதுச் செயலா் குளோரிந்தா, மாவட்ட துணைத் தலைவா் செல்லப்பாண்டி, வட்டாரத் தலைவா்கள் துரை, ரவீந்திரன், நகரத் தலைவா் சுடலைக்கண்ணு, சங்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Tags : agnipath
ADVERTISEMENT
ADVERTISEMENT