திருநெல்வேலி

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கு சான்றிதழ்

28th Jun 2022 03:09 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டம் வட்டார அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இல்லம் தேடி கல்வித் திட்ட சிறப்பு அலுவலா் இளம் பகவத் தலைமை வகித்து, இத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தன்னாா்வலா்களுக்குப் பரிசு வழங்கினாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் முன்னிலை வகித்தாா். இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்ட நோக்கம், நன்மைகள், தன்னாா்வலா்களின் செயல்பாடுகள் குறித்து கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில், அம்பாசமுத்திரம் வட்டாரத்தைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா். சேரன்மகாதேவி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். வட்டார ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் பிலிப் நன்றி கூறினாா். வட்டார ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் ஆபேல் தொகுத்து வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT