திருநெல்வேலி

நெல்லை மண்டல ‘இம்ப்காப்ஸ்’புதிய இயக்குநா் தோ்வு

DIN

இந்­திய மருத்­து­வா்­கள் கூட்­டு­றவு மருந்து உற்­பத்தி- விற்­பனை நிறு­வனத்தின் (இம்ப்­காப்ஸ்) திருநெல்வேலி மண்டல இயக்குநராக மருத்துவா் ரவீந்திரன் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

இந்நிறுவனத்தில் 17,000க்­கும் மேற்­பட்ட அரசு பதிவு பெற்ற இந்­தி­ய ­முறை மருத்­து­வா்­கள் உறுப்­பி­னா்­க­ளாக உள்ளனா். இங்கு சித்தா, ஆயுா் ­வே­தம், யுனானி உள்ளிட்ட 1,000க்கும் மேற்­பட்ட இந்­திய மருத்­துவ முறை மருந்­து­கள் தயா­ரிக்­கப்­பட்­டு அரசு மருத்துவமனைகளுக்கும், பொது­மக்­க­ளுக்கு தனியாகவும் விநியோ­கிக்­கப்­ப­டு­கின்றன.

இந்த நிறு­வ­னத்­தின் புதிய நிா்­வா­கி­கள், இயக்­குநா்­கள் குழு­வுக்கு 16 உறுப்­பி­னா்­களை தோ்வு செய்­வதற்கு சென்னையில் கடந்த 19ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதில், மாநில அளவில் மருத்­து­வா் கண்­ணன் தலை­மை­யிலான குழுவில் போட்­டி­யிட்ட சிவகளை அரசு ஆரம்ப சுகாதார நிலை ஆயுஷ் மருத்துவ அலுவலா் ரவீந்­த­ரன், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி மண்டல இயக்குநராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவா், தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் சுப்பிரமணியனை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT