திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா

27th Jun 2022 02:40 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்துவருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரை கரோனா தொற்று சில வாரங்களாக பூஜ்ஜியமாக இருந்தது. இந்நிலையில், இம்மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் மேலும் 38 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டது ஞாயிற்றுக்கிழமை உறுதியாகியுள்ளது.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் 17 பேருக்கும், அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, ராதாபுரம் பகுதிகளில் தலா 4 பேருக்கும், நான்குனேரி 3 பேருக்கும், சேரன்மகாதேவி, களக்காட்டில் தலா இருவருக்கும், மானூா், பாப்பாக்குடியில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து சுகாதாரத் துறையினா் கூறுகையில், பேருந்துகளில் பயணம் செய்யும்போதும், மருத்துவமனைகள், வங்கிகள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்டவற்றுக்குச் செல்லும்போதும் மக்கள் முகக் கவசம் அணிந்துசெல்ல வேண்டும். மேலும், கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றினால்தான் தொற்றில் சிக்காமல் தப்பிக்கலாம் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT